’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

Mahendran

செவ்வாய், 28 மே 2024 (19:54 IST)
தனுஷ் நடித்த ’ராயன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்ற செய்தி வெளியானதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’ராயன்’ படத்தின் பின்னணி இசையை ஏ ஆர் ரகுமான் முடித்து விட்டதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்த மாஸ் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ’ராயன்’ திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தனுஷ் தற்போது இந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அது மட்டும் இன்றி ரிலீஸ் தேதிக்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா உட்பட எந்த விழாவும் திட்டமிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ’ராயன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் ஜூலை மாதம் வெளியாகும் அல்லது தனுஷின் பிறந்த நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ’ராயன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்பது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்