பாலிவுட்டில் ரத்தன் டாடா பயோபிக்… இயக்குனர் யார்?

வியாழன், 8 டிசம்பர் 2022 (18:42 IST)
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் உரிமையாளரான ரத்தன் டாடாவின் பயோபிக் பாலிவுட்டில் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. ரத்தன் டாடா கேரக்டரில் தமிழ் பதிப்பில் நடிகர் சூர்யாவும் இந்தியில் நடிகர் அபிஷேக்பச்சனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த தகவல் உண்மையில்லை என சுதா கொங்கரா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இப்போது ரத்தன் டாடாவின் பயோபிக்கை எடுக்க பாலிவுட் பட நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை 83 படத்தின் இயக்குனர் கபீர் கான் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்