ஷங்கர் படத்தின் வாய்ப்புக்காக காத்திருக்கும் சென்சேஷன் நடிகை!

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:04 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றிவிட ராஷ்மிகா மந்தனா ஆர்வமாக உள்ளாராம்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த வாய்ப்புக்காக ராஷ்மிகா மந்தனா கொக்கி போட்டு கொக்குப் போல ஒற்றைக் காலில் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்