தற்போதைய காலகட்டத்தில் திறமை இருந்தால் எப்படியாது...எதிர்பார்க்காத நேரத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றுவிடுகின்றர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்கத்தா ரயில்வே டேஷனில் பாடிக்கொண்டு பிச்சை எடுத்த ராணு மண்டால் என்ற பெண் ஒருவரை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இதனால் அவர் ஒரே இரவில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
இந்நிலையில் தற்போது, ராணு மண்டால் ஒரு கடையில் இருந்தபோது அங்கிருந்த பெண் ஒருவர் அவரது தோளில் தட்டி கூப்பிட்டு செல்ஃ பி எடுத்துக்கொள்ளலாமா என கேட்டதற்கு அவரை மோசமாக திட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தளங்கில் வெளியாக நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.