ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்த இளையராஜா! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (17:13 IST)
நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மிகப்பெரும் ஆளுமையாக திகழ்பவர் இளையராஜா. ரஜினி, கமல் தொடங்கி இப்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை பலரது படங்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ரிகர்சல் பணிகளுக்காக இளையராஜா கோவை செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ரஜினியின் பெரும்பான்மையான படங்களுக்கு தேவா, ஏ ஆர் ரகுமானுக்கு முன்னதாக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்