தனக்கான பஞ்சை தானே போட்டுக்கொண்ட ரஜினி!!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:07 IST)
அண்ணாத்த படத்தில் சில வசனங்களை ரஜினிகாந்த் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 
 
ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் ஆனால் ரஜினிகாந்த் இப்போது படப்பிடிப்புக்கு வர தயாராக இல்லாஇ என தெரிகிறது. .இதனால் இப்போதைக்கு அண்ணாத்த ஷூட்டிங் நடப்பது போல தெரியவில்லை.
 
இந்நிலையில், இதற்கு முன், தான் நடித்த சில படங்களில், தனக்கான, 'பன்ச்' வசனங்களை எழுதி நடித்துள்ள ரஜினி, தற்போது, அண்ணாத்த படத்திற்காகவும், ஓரிரு, 'பன்ச்' வசனங்களை எழுதியுள்ளார். இந்த வசனங்களை படத்தில் வைக்க இயக்குனர் சிவாவும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்