’ஜெயிலர்’ படத்தின் முன்பதிவு தொடக்கம்.. சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:26 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு சற்று முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
சில நிமிடங்களில் சென்னையில் உள்ள முக்கிய திரை அரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 ஏற்கனவே பல நிறுவனங்கள் ஜெயிலர் பட்அத்தின் ரிலீஸ் தேதி அன்று விடுமுறை அளித்துள்ளதோடு தங்களது ஊழியர்களுக்கு டிக்கெட்டையும் வாங்கி கொடுத்துள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
’ஜெயிலர்’ திரைப்படம் இதற்கு முன் இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்