1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராஜ்கிரண். அந்த படம் பட்டி தொங்கியெங்கும் ஹிட் அடிக்க, முதல் படத்திலேயே ஸ்டார் ஆனார். அதனால் அவரின் சம்பளமும் எக்குதப்பாக எகிறியது. தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய கதாநாயகன் என்ற பெருமை அவரையே சாரும் என்றும் சொல்லபடுகிறது.
இந்நிலையில் ரஜினியே தனது படம் நேருக்கு நேராக ராஜ்கிரண் படத்தோடு மோத வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு இருந்தாராம். ரஜினியின் வீரா மற்றும் ராஜ்கிரணின் எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்கள் ஒரே தேதியில் ரிலிஸாவதாக இருந்த போது வீரா ரிலிஸை தள்ளிவைக்க சொன்னாராம். ஆனால் சில காரணங்களால் ராஜ்கிரன் படம் ரிலீஸாகததால் வீரா தமிழ் புத்தாண்டு நாளில் ரிலீஸாகி வெற்றி பெற்றது.