இந்நிலையில் சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடி என்பவருடைய மகன் 'விசாகன்' என்பவருடன் காதலில் இருந்ததாகவும். இந்த காதல் குறித்து அறிந்த ரஜினிகாந்த் தற்போது இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
இதை தொடர்ந்து தற்போது சௌந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் 'விசாகன்' என்றும் அவரை பற்றிய சில தகவல் வெளியாகியுள்ளது. இவர் வஞ்சகர் உலகம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த நடித்தவர் ஆவார். 'விசாகன்' வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டு தற்போது தந்தை தொழிலை கவனித்து வருகிறாராம். மேலும் இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.