தனக்கு மிகவும் பிடித்த நெருக்கமான இயக்குனரான மகேந்திரனோடு மீண்டும் பணிபுரிந்து வருவதால், அவருடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிக நேரம் செலவழித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ . இந்த படத்தின் டப்பிடிப்பு வாராணசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.. இதில் ரஜினி, த்ரிஷா, சசிகுமார், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரஜினி - மகேந்திரன் இருவருமே நீண்ட நேரம் தங்களுடைய பழைய கதைகளைப் பேசியபடி இருந்திருக்கிறார்கள்.
ஒரு முறை இயக்குநர் பாலசந்தர் 'பிடித்த இயக்குநர் யார்’ என்று ரஜினியிடம் கேட்ட போது, கொஞ்சம் கூட தாமதிக்காமல் ரஜினி சொன்ன பெயர் ‘இயக்குநர் மகேந்திரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.