அதன்பின்னர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக செயல்படும் அவர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தன் கட்சி நிர்வாகிகள்,ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் தன் ரசிகர்களை சந்தித்து, சுமார் 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து கொடுத்து, ஒவ்வொரு ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து இசிஆரில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.
மேலும் லாரன்ஸ் தன் ரசிகர்களைத் தேடிச் சென்றது மாதிரி சமீபத்தில் தூத்துகுடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த பிறகு மீண்டும் அதே பகுதிக்குச் சென்ற அவர், அப்பகுதி மக்களுக்கு ஹெல்மெட் இலவசமாக கொடுத்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்ததுடன், தன் அந்தகன் படத்திற்காக புரமோசனையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.