இந்தி சினிமாவில் ஆஹா லைஃப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2 , தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.
ராதிகா, தமிழ்சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், சித்திரம் பேசுதடி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.