குடைச்சல் கொடுக்கும் அட்லீ: தளபதிக்காக மெளனம் காக்கும் தயாரிப்பு நிறுவனம்!!

வியாழன், 1 ஜூன் 2017 (19:10 IST)
தெறி படத்தின் வெற்றியால், மீண்டும் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.


 
 
இந்நிலையில் விஜய் 61 படத்தின் பட்ஜெட் சொன்னதை விட பல மடங்கு அதிகரித்துவிட்டதாம். பட்ஜெட் ரூ.100 கோடிக்கு மேல் சென்றுவிட்டதாம். ஆனால், அட்லீ இந்த அளவு பட்ஜெட்டை சொல்லவில்லை என கூறப்படுகிறது. 
 
இதனால் தயாரிப்பு நிறுபனத்தின் அடுத்த படமான சங்கமித்ராவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இது தயாரிப்பு குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விஜய் பெரிய நடிகர் என்பதால் தயாரிப்பு குழு எதுவும் பேச முடியாமல் மௌனம் காத்து வருகிறது என செய்திகள் உலாவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்