அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ருண் விஜய் நடித்து வரும் மாபியா, இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடாதீர்கள் ..நீங்கள் சரியாகத்தான் இருக்கிறீர்கள் எதற்கு ஒர்க் அவுட் என கேட்டு வருகின்றனர்.