காதல் முறிவை சூசகமாக அறிவித்தாரா பிரியா பவானி சங்கர்?

செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:37 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய 10 வருட காதலரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த காலத்தில் இருந்தே மென்பொருள் பொறியாளர் ஒருவரை காதலித்து வந்தார். அவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு உறுதுணையாக இருப்பவர் தனது காதலர் என்று பெருமையாக பேசிவந்தார் பிரியா. ஆனால் இப்போது அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரின் காதல் முறிவை உறுதி செய்யும் விதமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்