பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒரு படம் தான் 'ஒத்த செருப்பு. உலகிலேயே ஒரு படத்தை ஒருவரே இயக்கி, தயாரித்து நடித்த ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தபோது கோலிவுட் திரையுலகமே பார்த்திபனை பாராட்டி தள்ளியது ஞாபகம் இருக்கலாம்.
இந்த படத்திற்கு நடுவர்கள் வழங்கும் சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள நடிகர் பார்த்திபன் இந்த படத்துக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் இது. இந்த படத்தில் எனக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் எனக்கு உண்டு. எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக "அதாகப்பட்டது… ஆதங்கமாகப்பட்டது... ஆர்வமாக்கப்பட்டு... அதுவே க்ரியா ஊக்கியாகி பின் கிரியேட்டிவிட்டி ஆகி அதே சிந்தையாகி சித்தமாகி சிரத்தையாகி செயல் வடிவமாகிப் படைப்பாகிப் பரிசாகியும் விடுகிறது எனக்கு. முன் அடையாளமில்லாத நான் சினிமாவுக்குள் வந்ததே திறமை பாராட்டப்படுவதற்கே. அதற்கான உழைப்பே அஸ்திவாரம்.
இது ஒரு பக்கம்… நான் எந்தப் பதிவை இட்டாலும், “சிறந்த நடிகர் மனோஜ் பாயுடன்” என்று மொக்கையாக வெறும் செய்தியாக இடுதல் பிடிக்காது. அதில் ஏதேனும் hook point, எவ்வாறெல்லாம் அவ்வார்த்தைத் தொடர் கவனிக்கப்படுகிறது என்ற ஆர்வத்தில் தான் இட்டேனே தவிர, ஆதங்கத்தில் அல்ல. அது தவறாக அறிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், ஆயிரத்தில் 990 பேர் எழுதியிருக்கும் வாசகங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.