நடிகை ஓவியா தமிழக ரசிகர்களின் ஒட்டுமொத்த இதயத்தையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கொள்ளையடித்துள்ளார். அவரது வெளிப்படையான அனுகுமுறை, தைரியமான போராட்டக்குணம், யாரைப்பற்றியும் புறம் பேசாமல் இருக்கும் பண்பு என அவரது நடவடிக்கைகளால் அனைவரது இதயத்திலும் இடம் பிடித்துவிட்டார்.
இது குறித்து அவர் பேசியதாவது, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் நடத்தையை வைத்து பார்க்கும் போது ஓவியா தான் இந்த போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அந்த பெண் வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக்கொள்கிறார்.