இணையத்தில் இது நம்ம ஆளு - கமிஷனர் அலுவலகத்தில் டி.ஆர். புகார்

திங்கள், 30 மே 2016 (17:35 IST)
டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இது நம்ம ஆளு சென்ற வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. 


 
 
முன்னாள் காதலர்கள் சிம்பு, நயன்தாரா நடித்திருந்ததால் ரசிகர்கள் படத்தை விரும்பி பார்த்து வருகின்றனர். 
 
படத்தின் ஓபனிங் பிரமாதமாக உள்ளது என செய்திகள் வருகின்றன. 
 
இந்நிலையில், இணையத்திலும் படத்தை சிலர் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். அதனால், இணையத்தில் படத்தை பதிவிறக்கி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
 
இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இணையத்தில் படத்தை பதிவேற்றுவதை தடுக்க வேண்டும் என்று டி.ஆர். கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 
 
இல்லாவிடில் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்