‘காலா’ படத்தின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் இதோ…

வெள்ளி, 21 ஜூலை 2017 (20:19 IST)
ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் தொகை வெளியாகியுள்ளது.


 
 
‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘காலா’. ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, சுகன்யா, சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டில் உள்பட, பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 
 
மும்பையில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட், 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில், 160 கோடி ரூபாய் என்பது அதிகாரப்பூர்வ பட்ஜெட் தொகை என்று தெரியவந்துள்ளது. ‘காலா’ படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என்று ராஜசேகரன் வழக்கு தொடுத்துள்ளார் அல்லவா? அதற்கு அளிக்கப்பட்ட பதில் மனுவில், படத்தின் பட்ஜெட் தொகை 160 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்