கடந்த 2002 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான “ஆட்டி ரஹெங்கி பஹ்ரைன்” என்ற தொடரின் மூலமாக சினிமாவில் நுழைந்த நடிகை நிகிதா துக்ரல் தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “அலெக்ஸ் பாண்டியன்” படத்தில் நடித்து அறிமுகமானார்.
இதையடுத்து ஐட்டம் டான்ஸ் ஆட ஆரம்பித்த அவர் தென்னிந்திய திரை உலகின் கிளாமர் ராணியாக வலம் வர துவங்கினார். கவர்ச்சி நடிகை என்ற பெயர் கிடைத்தாலும் கிடைக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்காமல் சரியாக பயன் படுத்திகொண்ட அவர் “சரோஜா” படத்தில் “கோடான கோடி” பாடல் முதல் “பாயும் புலி” படத்தில் வரும் “நான் சூடான மோகினி” பாடல் வரை தென்னிந்திய சினிமாவின் அனைத்து மொழி படங்களுக்கும் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.