காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடிய திடீர் போராளிகளில் பல இயக்குனர்கள் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டரில் சற்றுமுன்னர், 'ஐபிஎல் இடம் மாறிவிட்டால்! கருப்பு கொடி காட்டிவிட்டால்! தண்ணீர் கிடைத்துவிடுமா? என்று கேட்கும் அறிவாளிகள் எல்லாம் மிஸ்டு கால் கொடுத்து நதிகளை இணைக்க முயற்சி செய்தவர்கள் தானே என்று கூறியுள்ளார்.
சுசீந்திரனின் இந்த டுவீட்டுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நெட்டிசன்கள் சுசீந்திரனை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டனர்.
ஒரு டுவிட்டர் பயனாளி, 'முட்டாத் தனமா பேசாதயா... IPL ல தடுத்த காவிரி கெடைக்குமான்னு கேக்குறவங்க தான்... அன்னைக்கி மிஸ்டுகால் கொடுத்தவனுங்கள கலாய்ச்சோம். கலத்துல இறங்கி போராடனும். IPL பாக்காதீங்க...பாக்காதீங்கன்னு சொல்லி சொல்லியே, முழு கவனத்தையும் IPL மேல திருப்புனதே உங்கள மாதிரி ஆளுங்க தான்' என்று கூறியுள்ளார். இன்னொருவர் 'ஐபிஎல் க்கு சப்போர்ட் பண்றவன் எல்லாம் பிஜேபியா.. முட்டத்தனமா தான் பேசுவியா நீ' என்றும், சினிமாவும் காவிரி போராட்டத்திற்கு எதிரானதுதான் இனிமேல் சினிமாவும் பார்க்க மாட்டோம்' என்றும் கூறியுள்ளனர்.
சினிமாவில் வேலையில்லாமல் இருக்கும் இயக்குனர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மக்களுக்கு சினிமாக்காரர்கள் மீதே ஒரு மோசமான அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.