பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமே பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருப்பதால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை முன் கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளனராம். படம் திட்டமிட்ட நாளுக்கு முன்னரே வெளிவரவிருப்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். எனவே இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.