அட ஆவணப்படத்துல கூட டப்பிங்தானா?... நயன்தாரா மேல் எழுந்த கடும் விமர்சனம்!

vinoth
வியாழன், 21 நவம்பர் 2024 (10:02 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy tale’ ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ரிலீஸாகியுள்ளது.

இந்த திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்த வீடியோ வெளியாக நடிகரும் நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார். நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில் 2 ஆண்டுகளாக அதற்கு அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறினார். இந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த ஆவணப்படத்தின் மீது ஒரு செயற்கையான எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த எதிர்பார்ப்பு பெரிய அளவில் வேலை செய்யவில்லை. ஆவணப்படம் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. அதற்கு அதன் உருவாக்கமும், தொழில்நுட்பக் குறைபாடுகளும் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. ஆவணப்படத்தில் நயன்தாரா பேசுவதெல்லாம் அவர் குரலில் இடம்பெறாமல் டப்பிங் கலைஞர் ஒருவரின் குரலால் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் நயன்தாரா பற்றி புகழ்ந்து பேசும் கலைஞர்கள் பலரின் குரல்களும் டப் செய்யப்பட்டுள்ளன. இது இந்த ஆவணப்படத்துக்கு ஒரு அமெச்சூர் தன்மையைக் கொடுக்கிறது. படத்தில் நயன்தாராவுக்குக் கொடுக்கப்படும் அதீத பில்டப்புகளும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்