இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையில் விளையாடும் சி எஸ் கே அணி மோசமான தோல்விகளை பெற்று, ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
இந்நிலையில் தோனி கிரிக்கெட் ஓய்வுக்கு பின் திரைப்பட தயாரிப்பில் இறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் முதல் படத் தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் நடித்த சி எஸ் கே விளம்பர படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. பேச்சிலர் படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் மற்றும் குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் ஆகிய இருவரிடமும் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.