நயன்தாரா நடிக்கும் புதிய படம் ‘மண்ணாங்கட்டி’… இயக்குனர் ஆகும் யுடியூபர்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (08:30 IST)
நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று இந்தபடத்தின் பூஜை நடக்க உள்ளதாகவும், விரைவில் கொடைக்கானலில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா அடுத்து மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோரோடு இணைந்து டெஸ்ட் படத்திலும், கமல்ஹாசன் மணிரத்னம் இணையும் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்