பாலிவுட் ஹீரோக்கள் ஒரே மாதிரியாக நடிக்கிறார்கள் – நவாசுதீன் குற்றச்சாட்டு!

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (16:26 IST)
பாலிவுட்டில் கதாநாயகர்களாக நடிப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாகவே நடிப்பதாக நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கி தனது அசுரத்தனமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர். ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் நவாசுதீன். இப்போது அவர் பாலிவுட்டில் இருக்கும் கதாநாயகர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே நடிப்பதாகக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அவர் ‘எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை ஒரு நாயகனாக்கவில்லை என்பதற்கும் கடவுளுக்கு நன்றி. பாலிவுட்டில் இருக்கும் கதாநாயகர்கள்தான் ஒரே மாதிரியாக 30 வருடங்கள் வரை நடிக்கிறார்கள். அதில் முக பாவனை, தோரணை என எதிலும் மாற்றம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்