பத்மஸ்ரீ விருது வென்ற நடிகை சவுகார் ஜானகிக்கு நாசர் வாழ்த்துக்கடிதம்!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:28 IST)
சமீபத்தில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்., 
 
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ ஓ எங்கள் சவுக்கார் அம்மா!
அத்தனை மொழிகளில் எத்தனை நூறு 
படங்கள் 
ஒவ்வொன்றும் முத்தாய்!
ஒன்றில் கண்டது இன்னொன்றில் 
இல்லை!
புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி!
யாருக்கும் அமைந்ததில்லை உங்கள்
கண்கள்!
புதிய பறவையில் மிரட்டியதும்
மிரன்டு போனது ஒரு ஜோடி கண்களா?
கண்களை மிஞ்சும் உங்கள் முத்து சிரிப்பு
அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான
அன்பும் பாசமும்
தாங்கள் எங்களுக்கு தந்த 
கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும்
முத்து முத்தாய் கொடுத்து அழகு பார்த்து
 மனம் மகிழ்ந்து விம்மிய எங்களுக்கு
அம்முத்துமாலைக்கு பதக்கமாய்
இன்று பத்மஸ்ரீ உங்களுக்கு உவகை
எங்களுக்கு பெருமை!
 
இவ்வாறு நடிகர் நாசர் தனது வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்