தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் கௌதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் மூன்றாண்டுகளாக இந்தப் படம் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.
இது சம்மந்தமாக கார்த்திக் நரேனுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. ஆனாலும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கௌதம் மேனனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியவில்லை. ஆனாலும் இந்த படம் எப்போது ரிலிஸாகும் என ஆர்வம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் தமிழில் புதிதாக கால்பதிக்கும் சோனி லைவ்வில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாகவும், இந்த படத்தின் மீது உள்ள எல்லா பொருளாதார பிரச்சனைகள் எல்லாம் இப்போது முடித்து வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சனைகள் முடிந்ததில் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பு மிக முக்கியமாக அமைந்துள்ளதாம். படத்தில் நடித்துள்ள அரவிந்த சுவாமி, சந்தீப் கிஷான் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு இன்னும் வழங்கப்பட இருந்த சம்பளத்தின் பெரும்பகுதியை வேண்டாம் என்று சொல்லி தயாரிப்பாளரின் நிதிச்சுமையை குறைத்துள்ளனராம்.