இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைனா நந்தினி

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (12:52 IST)
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் மைனா நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
முக்கியமாக விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் ‘மைனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததில், இவரை பலரும் மைனா எனவே அழைத்து வந்தனர். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவராகவும் அவர் இருந்துள்ளார். தற்போது, அவர் பல தொடர்களில் நடித்து வருகிறார்.
 
இவர் கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன்  விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நந்தினி, நடன இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து பேசிய நந்தினி, எனது திருமணம் குறித்து வெளியான தகவல்களை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது. மேலும் என்னுடன் ஒப்பிட்டு பேசும் அந்த நடன இயக்குனர் எனக்கு தம்பி மாதிரி, அவனுடன் வெளியே செல்வது தவறா. பழகிய என் மீது தவறு கிடையாது. எங்களின் அக்கா தம்பி உறவை கொச்சையாக விமர்சனம் செய்பவர்கள் தான் கேவலமானவர்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்