'பிசாசு 2’ படத்தின் ‘நெஞ்சை கேளு’ பாடல் ரிலீஸ்!

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (17:52 IST)
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 
 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான பாடகி பிரியங்கா இந்த பாடலை பாடியுள்ளார். கபிலன் இந்த பாடலை எழுதியுள்ளார்.
 
கார்த்திக்ராஜா கம்போஸ் செய்த இந்த பாடல் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் மெலோடி பாடல் ஆக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த படம் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்