கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கத்தாரில் கலைகட்டிய கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோத இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் கோல் போட்டிருந்தனர். பெனால்டி ஷுட் மூலமாக அர்ஜெண்டினா 4-2 என்ற கணக்கில் போட்டியை வென்று 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாம்பியன் ஆனது.
இந்நிலையில் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் மிஷ்கின் “மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவிலும் இசை உருவாகிறது. பீத்தோவான், நெருடா, வான்கா போல மெஸ்ஸியும் ஒரு பெரும் கலைஞர். அன்பு மெஸ்ஸியே உன் கால்களில் முத்தமிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.