இந்த ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்! டாப் 10 பட்டியலில் 2 தமிழ் படங்கள்!

Prasanth Karthick
புதன், 11 டிசம்பர் 2024 (11:32 IST)

இந்த 2024ம் ஆண்டு நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள், பார்க்கப்பட்ட படங்கள் என ஆண்டை நினைவுக்கூரும் டாப் 10 பட்டியல்களை பல நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன.

 

 

தேடுபொறியில் உலகம் முழுவதும் முன்னணியில் உள்ள கூகிள் நிறுவனம் ஆண்டுதோறும் இறுதியில் இவ்வாறு தங்களது உலாவியில் தேடப்பட்ட டாப் விஷயங்களை பட்டியலிடுகிறார்கள். அவ்வாறாக இந்த 2024ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் டாப் 10 பட்டியலை கூகிள் வெளியிட்டுள்ளது.

 

அதில் அதிகமானோரால் தேடப்பட்ட படமாக இந்தி திரைப்படம் ஸ்த்ரீ-2 முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி உள்ளது. தொடர்ந்து 12த் பெயில், லாபட்டா லேடீஸ் உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இதில் 6வது இடத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படமும், 8வது இடத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்ற மஞ்ஞுமல் பாய்ஸ், ஆவேஷம் உள்ளிட்ட படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்