பணமா, ரசிகர்களா? எது முக்கியம்: ஹன்சிகா கூறும் பதில்!

வியாழன், 15 டிசம்பர் 2016 (10:04 IST)
சினிமா நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமான ரசிகர்கள் தங்களை பின்தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே நடிகைகளின் மார்க்கெட் நிலவரங்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.

 
நடிகை ஹன்சிகாவை பேஸ்புக்கில் 60 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதற்காக அவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். இணையதளம் மற்றும் பேஸ்புக்கில் அதிம் தேடப்படும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர்.
 
இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில்... “பேஸ்புக்கில் எனக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 60 லட்சம் பேர் என்னை பின்தொடர்கிறார்கள். ரசிகர்கள் தங்கள் மனதில் எனக்கு உயர்வான இடம் அளித்து இருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை கோடி சம்பாதித்தோம் என்பதை விட எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் என்னை சின்ன குஷ்பு என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறினார்.
 
இணையதளத்தில் மர்ம ஆசாமிகள் சிலர் நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதால், சங்கடங்கள் ஏற்படுவதோடு அவற்றை முடக்க சம்பந்தப்பட்ட நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார்கள் அளிப்பதும் அடிக்கடி நடக்கின்றன. ஹன்சிகா சமீபத்தில் தன்பெயரில் போலி கணக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்