மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாக இருக்கும் 12th man என்ற திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது,. த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 ஆகிய வெற்றி படங்களை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது
அதேபோல் மம்முட்டி மற்றும் பார்வதி இணைந்து நடிக்கும் பழு என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மோகன்லாலின் 12th man மற்றும் மம்முட்டியின் பழு ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது