ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்த கீரவாணி!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (08:29 IST)
இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆஸ்கர் வென்ற RRR படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி, ராஜமௌலியோடு தான் அடுத்து இணையும் படம் பற்றி பேசும்போது “அந்த படம் சர்வதேச தரத்திலான ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும். காடுகளில் நடக்கும் சாகசப் படமாக அந்த படத்தை ராஜமௌலி உருவாக்க உள்ளார்” எனக் கூறியுள்ளார். மேலும் அந்த படத்துக்கான வேலைகளை தான் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்