27 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவில் எம் எம் கீரவாணி!

செவ்வாய், 30 மே 2023 (15:48 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயரில் இவர் அழகன், உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தவர். இவர் இசையமைப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் உலக அளவில் புகழ் பெற்றன. கடைசியாக அவர் இசையமைத்த ஆர் ஆர் ஆர் படத்துக்கு கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகள் சிறந்த பாடல் பிரிவில் கிடைத்தன.

இதையடுத்து மீண்டும் பிஸியான இசையமைப்பாளராக பல மொழிப் படங்களுக்கு இசையமைத்து வரும் கீரவாணி தற்போது மெஜிசியன் என்ற மலையாளப் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்னர் 27 ஆண்டுகளுக்கு முன் தேவராகம் என்ற மலையாள படத்துக்கு 1996 ஆம் ஆண்டு இசையமைத்திருந்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி என எம் எம் கீரவாணி தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்