பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை இழிவாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் தலையிட்டு பிரபமாகி வரும் மீரா மிதுன் கடனை சில நாட்களுக்கு முன்னர் தான் மிகுந்த மன அழுத்ததில் இருப்பதாக கூறி தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைதல பக்கங்களை யாரேனும் வாங்க விரும்பினால் வாங்கலாம் என கூறியிருந்தார்.