புதிய சாதனை படைத்த மாஸ்டர் டீசர்: மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்!
புதன், 16 டிசம்பர் 2020 (11:22 IST)
இந்திய அளவில் வெளியான டீசர்களில் அதிக கமெண்ட் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது.
நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கடந்த பிப்ரவரி இறுதியிலேயெ பட தயாரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு மாஸ்டரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து யூடியூப் தளத்தில் மாஸ்டர் டீசர் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது. அந்த வகையில் தற்போது, இந்திய அளவில் வெளியான டீசர்களில் அதிக கமெண்ட் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது.
அதாவது மாஸ்டர் டீசரை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக விஜட் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #MasterTeaser என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.