மலையாள நடிகையை டாவடிக்கும் ‘கயல்’ சந்திரன்

சனி, 11 நவம்பர் 2017 (15:06 IST)
‘கயல்’ சந்திரன் நடிக்கும் ‘டாவு’ படத்தில், அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நடிக்கிறார்.

 
‘லொள்ளு சபா’ புகழ் ராம் பாலா, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சந்தானம் நடித்த இந்தப்  படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது படத்துக்கு ‘டாவு’ என்று பெயர்  வைத்துள்ளார்.
 
இந்தப் படத்தை டூ மூவி பப்ஸ் சார்பில் பி.எஸ்.ரகுநந்தன் தயாரிக்கிறார். ‘கயல்’ சந்திரன் நடித்துவரும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி  இசையமைக்கிறார்.
 
‘தில்லுக்கு துட்டு’ போலவே முழுநீள காமெடிப் படமாக இது உருவாக இருக்கிறது. கூடவே காதலும், செண்டிமெண்டும் இருக்கிறது. ‘கயல்’ சந்திரன் ஜோடியாக மலையாளத்தைச் சேர்ந்த ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இவர், ‘ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ படத்தில் நடித்தவர். இதுதான் அவருக்கு முதல் தமிழ்ப் படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்