இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே ஒப்புக்கொண்டுள்ளார். பாக்ஸராக இந்த படத்தில் நடிக்கும் அருண் விஜய்யின் மேனேஜராக மதி நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் இப்போது ஆன்லைன் நடிப்புப் பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இயக்குகிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக “இறுதி சுற்று” நாயகி ரித்விகா சிங் நடிக்கிறார். தனது கதாபாத்திரத்துக்காக அருண் விஜய் வியட்நாம் போய் பயிற்சி எடுத்திருக்கிறார் அருண் விஜய். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தன. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.