அமுல்பேபி மாதவன் இறுதிச்சுற்றில் ஆஜானுபாகு மாதவனாக வந்தபோதே தெரிந்துவிட்டது, இந்த ஆள் எதை வேண்டுமானாலும் செய்வார் என்பது. விரைவில் ஒரு படத்துக்கு மாதவன் வசனம் எழுதப் போகிறார், அதுவும் இந்தியில்.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் - வேதா படத்தில் நடித்துவரும் மாதவன் அடுத்து சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். முழுக்க காட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டையணம் சற்குணமே இயக்குகிறார்.