தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தியேட்டர்களுக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமே என உளவுத்துறை எச்சரித்த நிலையில் போலீசார் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி படம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,.3 ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், இந்து இணையருக்கு இந்து முறைப்படி, பள்ளிவாசல், நிர்வாகத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.