லியோ இரண்டாம் பாதி சொதப்பலா? விமர்சனங்களுக்கு பதில் சொன்ன லோகேஷ்!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:46 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகி நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் சரியாக எடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கார்த்தி 25 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் லியோ விமர்சனங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார். அதில் “லியோ படத்தின் இரண்டாம் பாதி லேக் (மந்தமாக) ஆக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. அதை ஏற்றுக் கொள்கிறேன்” என பக்குவமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்