தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டுமே செய்து வருகிறாராம். விஜய் இது மாதிரி பட ரிலிஸ் நேரங்களில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வருகிறார். விஜய் வராததால் விஜய் சேதுபதியும் வரவில்லை என சொல்லிவிட்டாராம். இதனால் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் லோகேஷ் மட்டுமே சந்தித்து வருகிறாராம்.