அனிருத்தின் இசையை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்த இயக்குநர் !

புதன், 20 மே 2020 (18:39 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை  அமல்படுத்தப்பட்டது.  அதன் பிறகு 4ஆம் கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. 
 

இந்நிலையில், இந்தக் கொரோன காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டி, தினமும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத் தினமும் பாடல்களின் இசையை வீட்டில் இருந்தபடியே இசைத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நானும் ரவுடிதான் என்ற பாடலை அனிருத் வாசித்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதைக் கேட்டுவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் ஆனந்த கண்ணீர் வடிப்பதாகக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்