எல்ஜிஎம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (11:01 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்‌ஷியோடு கலந்துகொண்டார்.

இந்நிலையில் இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படக்குழுவினர் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து படத்தை ப்ரமோட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ள எல் ஜிஎம் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் 153 நிமிடங்கள் ஓடும் விதமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்