இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் காட்சிகள்… படக்குழு அதிர்ச்சி

வியாழன், 19 அக்டோபர் 2023 (07:06 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக  இன்னும் சில மணிநேரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் தொடக்கக் காட்சிகள் சில நிமிடங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. இது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்