அந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தைரியமாகவும், வெளிப்படையாகவும் குரல் கொடுத்தவர் லட்சுமி. மேலும் சமூகவலைத்தளங்களிலும் குற்றங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் .
அதாவது, எனது அப்பா உலக வாழ்வை இன்றுடன் நீத்துவிட்டார். 97 வயதாகும் அவரின் மறைவால் அம்மா, அக்கா, அண்ணா என குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். மேலும், எங்கள் தந்தை இறப்பிற்கு நாங்கள் சோகம் அனுசரிக்கவில்லை. அதற்கு மாறாக அவரின் வாழ்க்கையை கொண்டாடுகிறோம் என அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.