இந்த படத்தின் நாயகியாக சமீபத்தில் பிரியா பவானி சங்கர் அறிவிக்கப்பட்டார் என்பதும் மேலும் வில்லன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார் என்றும் செய்திகள் வெளியானது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் மேலும் ஒரு வில்லனாக கே ஜி எஃப் முதல் பாகத்தில் கருடனாக நடித்து மிரட்டிய ராமச்சந்திர ராஜுவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.