ஒரு வருஷம் காத்திருந்தேன்... இது "மாஸ்டர்" பொங்கல்டா - கீர்த்தி சுரேஷ் !

புதன், 13 ஜனவரி 2021 (07:59 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் (ஜனவரி 13) இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கினாள் திரையரங்குகள் மூடப்பட்டு சுமார் 1 வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்போது திரையரங்கில் வெளியாகும் முதல் படமே மாஸ்டர் என்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் உச்சகத்தில் கொண்டாடி வருகின்றனர். 
 
பொங்கல் தினத்தில் வெளியாவதால் படத்திற்கு நல்ல கலெக்ஷன் கிடைத்து அமோக வெற்றி பெரும் என கணிக்கப்படுகிறது. இதற்காக விஜய் ரசிகர்கள் முதல் ஷோ பார்க்க விடியற்காலையிலே தியேட்டர் வாசனில் பட்டாசு வெடித்து டான்ஸ் ஆடி வெறித்தனமான வெளியிட்டிங்கில் காத்திருந்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். 
 
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு தளபதி ரசிகையாக தியேட்டருக்கு சென்று பர்ஸ்ட் ஷோ பார்த்த அனுபவத்தை குறித்து ரசிகர்ளிடம் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ஒரு வருடம் முழுவதும் காத்திருந்து தியேட்டருக்கு திரும்பி வருவது எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்க கூட முடியாது... இன்னும் சிறந்தது என்னெவென்றால் ? இது மாஸ்டருக்கானது... என கூறி இது மாஸ்டர் பொங்கல்டா என டேக் செய்து பதிவிட்டுள்ளார். 

Can’t even describe how ecstatic it feels to be back at a theatre after waiting for a whole year, and what’s even better? It’s for #Master

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்